கொண்டா சுரேகா விவகாரம் ,காங்கிரஸ் மேலிட முடிவே இறுதியானது - கோமட்டி ராஜகோபால் ரெட்டி பரபரப்பு கருத்து
ஐதராபாத் , 03 செப்டம்பர் (ஹி.ச.) தெலுங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அமைச்சர் கொண்டா சுரேகா விவகாரம் குறித்து முனுகோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோமட்டி ராஜகோபால் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார். முனுகோட்டில் நடைபெற்ற பல்வேறு வளர்ச்சி
A


ஐதராபாத் , 03 செப்டம்பர் (ஹி.ச.)

தெலுங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அமைச்சர் கொண்டா சுரேகா விவகாரம் குறித்து முனுகோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோமட்டி ராஜகோபால் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

முனுகோட்டில் நடைபெற்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகளில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கொண்டா சுரேகா தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அறிக்கைகள் காங்கிரஸ் மேலிடத்திடம் இருப்பதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும், அந்த முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கொண்டா சுரேகா தொடர்பாக கட்சி மேலிடம் எந்த முடிவு எடுத்தாலும், அதனை அவர் ஏற்றுக்கொண்டு கட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்றும் ராஜகோபால் ரெட்டி தெரிவித்தார்.

தெலுங்கானாவில் அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் காங்கிரஸ் மேலிடமே இறுதி முடிவு எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளாக பி.ஆர்.எஸ். கட்சிக்கு எதிராக போராடிய காங்கிரஸ் தொண்டர்களுக்கு உரிய நியாயம் கிடைக்கச் செய்வதே தனது முக்கிய நோக்கம் என்று ராஜகோபால் ரெட்டி தெரிவித்தார். கட்சித் தொண்டர்களின் நலன் மற்றும் அவர்களின் எதிர்காலத்துக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுவேன் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, கொண்டா சுரேகாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரேவந்த் ரெட்டி கவர்னருக்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், ராஜகோபால் ரெட்டி தெரிவித்துள்ள கருத்துகள் தெலுங்கானா காங்கிரஸ் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA