வருசநாட்டில் பொதுமக்களை அச்சுறுத்திய 80-க்கும் மேற்பட்ட நாய்கள் பிடிப்பு
தேனி, 03 செப்டம்பர் (ஹி.ச.) தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் சில இடங்களில் ஒரே கூட்டமாக 20-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிந்ததாகவும், சாலைகளிலேயே நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அந்
Nn


தேனி, 03 செப்டம்பர் (ஹி.ச.)

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் சில இடங்களில் ஒரே கூட்டமாக 20-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிந்ததாகவும், சாலைகளிலேயே நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அந்த வழியாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, வருசநாடு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித் திரிந்த 80-க்கும் மேற்பட்ட நாய்கள் ஊராட்சி நிர்வாகப் பணியாளர்கள் மூலம் பிடிக்கப்பட்டன.

பிடிக்கப்பட்ட அனைத்து நாய்களும் மதுரையில் உள்ள கருத்தடை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்தடை செய்யப்பட்ட பின்னர், அவை பாதுகாப்பாக வெவ்வேறு பகுதிகளில் விடப்படும் என்றும் ஊராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ