Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 03 செப்டம்பர் (ஹி.ச.)
திருச்சி மாவட்டம், பிச்சாண்டவர் கோவில் ரயில் நிலையத்தில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர், இந்தியன் வங்கியில் காசாளராகப் பணியாற்றி கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்.
இவரும் தினமும் பிச்சாண்டவர் கோவில் ரயில் நிலையத்தில் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
வழக்கம்போல் இன்று காலை 7 மணியளவில் அவர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மதுரையில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த பல்லவன் விரைவு ரயிலின் காற்று வீச்சில் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
இதில் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த ரயில்வே காவல்துறையினர், உடனே அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாகப் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN