கிருஷ்ணகிரியில் அனுமதியின்றி கிரானைட், வண்டல் மண் ஏற்றிச் சென்ற 12 வாகனங்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி, 04 செப்டம்பர் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் மற்றும் வண்டல் மண் அள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், கனி
12 vehicles transporting granite and alluvial soil without permission seized in Krishnagiri.


கிருஷ்ணகிரி, 04 செப்டம்பர் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் மற்றும் வண்டல் மண் அள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், கனிமவளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது, உரிய சுரங்க அனுமதிச் சீட்டு மற்றும் போக்குவரத்து அனுமதி ஆவணங்கள் இன்றி கிரானைட் கற்கள் மற்றும் வண்டல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரிகள் மற்றும் மினி சரக்கு வாகனங்கள் என மொத்தம் 12 வாகனங்கள் சிக்கின. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அருகிலுள்ள அரசு கிடங்கில் நிறுத்தி வைத்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது கனிமவள சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதுபோன்ற சட்டவிரோத கனிம கடத்தலை தடுக்க தொடர் சோதனைகள் நடைபெறும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b