Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 04 செப்டம்பர் (ஹி.ச.)
கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி தம்மாமில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட விமானத்தின் கழிவறையில், “Bomb” என எழுதப்பட்ட டிஷ்யூ பேப்பர் ஒன்று கிடந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, விமானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அகமதாபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அகமதாபாத் போலீசாரின் தகவலின்படி, விமானத்தில் இருந்த 32 பயணிகளும் டெர்மினல் 2-ல் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர்.
தொடர்ந்து, பாதுகாப்பு அமைப்புகள் விமானத்தில் முழுமையான சோதனை மேற்கொண்டன.
இதுதொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து சட்ட அமலாக்க அமைப்புகள் விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணைக்கு சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளுக்கும் விமான நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், பயணிகள், விமானப் பணியாளர்கள் மற்றும் விமானச் சேவைகளின் பாதுகாப்பை பாதிக்கும் அல்லது பாதிக்கக்கூடிய எந்தவொரு செயலையும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கண்டிப்பதாகவும், விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P