Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அலுவலகம் மாற்றப்பட உள்ளது. தற்போதைய பிரதான கட்டிடத்தில் நிலவும் கடுமையான இடப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்படுவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதன்படி, முதலமைச்சரின் அலுவலகம் மட்டுமின்றி முதலமைச்சரின் செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்களின் அறைகளும் 10-வது தளத்திற்கு மாற்றப்பட உள்ளன. தற்போது அந்த தளத்தில் செயல்பட்டு வரும் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் பல்வேறு பிரிவுகள் கலைவாணர் அரங்க வளாகத்திற்கு மாற்றப்படவுள்ளன.
இந்த நிலையில், முதலமைச்சரின் புதிய அலுவலகத்தை அமைத்து புதுப்பிக்கும் பணிகளுக்கான டெண்டர் முடிவுகள் வெளியாகியுள்ளன. அரசு நிர்ணயித்த மதிப்பீட்டுத் தொகையை விட 32 சதவீதம் குறைவாக, ரூ.3.78 கோடிக்கு ராசி பில்டர்ஸ் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.
இதன் மூலம், முதலமைச்சரின் புதிய அலுவலகப் பணிகளுக்கான டெண்டரில் ராசி பில்டர்ஸ் நிறுவனம் தேர்வாகியுள்ளது. புதிய அலுவலகம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam