Enter your Email Address to subscribe to our newsletters

எடப்பாடி, 04 செப்டம்பர் (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் மான்களை வேட்டையாடி, மான் கறியை விற்பனை செய்த கும்பலை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில், சேலம் மாவட்டம் தேவூர் மயிலம்பட்டியைச் சேர்ந்த சிற்றரசு (49) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சேலம் தெற்கு வனச்சரக அலுவலர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் சிற்றரசின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டின் மேல் மாடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 14 கிலோ சந்தனக்கட்டைகள் சிக்கின.
வனத்துறையினர் சோதனைக்கு வருவதை அறிந்த சிற்றரசு, குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டை சோதனையிட்ட அதிகாரிகள், வீட்டுக்கு சீல் வைத்தனர்.
மேலும், சிற்றரசின் வங்கிக் கணக்கில் கடந்த ஒரு மாதத்தில் சுமார் ரூ.1 லட்சம் பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், தலைமறைவான சிற்றரசை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ