பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கக் கோரி போராடிய விவசாயிகள் கைது - கனிமொழி கண்டனம்
தமிழ்நாடு, 04 செப்டம்பர் (ஹி.ச.) பாபநாசம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி போராடிய தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளை கைது செய்ததற்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக
கனிமொழி


தமிழ்நாடு, 04 செப்டம்பர் (ஹி.ச.)

பாபநாசம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி போராடிய தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளை கைது செய்ததற்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

நியாயமான உரிமைக்காகப் போராடிய விவசாயிகளை அராஜகமாகக் கைது செய்துள்ள தவெக அரசின் கொடுங்கோன்மை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தை நம்பியுள்ள சுமார் 5,000 ஏக்கர் வாழைப் பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில் இருப்பதாகவும், இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகள் பலமுறை மனு அளித்தும், தொடர் போராட்டங்களை நடத்தியும் மாவட்ட நிர்வாகமும் நீர்வளத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இதனால் விவசாயிகள் சாலையில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே, விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக ஏற்று, பாபநாசம் அணையில் இருந்து 1,500 கனஅடி தண்ணீரை திறந்துவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P