Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 04 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை, மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் நிதி நிறுவனமான FQL-ன் மோசடி சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் பணத்தை மீட்டுத் தருவது தொடர்பாக, தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா IAS மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, மோசடி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் நிலை, அவர்களின் பணத்தை மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் மோசடியில் தொடர்புடையவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், இச்சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கையைப் பெற்று, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் சமர்ப்பித்து, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், அவர்களின் பணத்தை விரைந்து மீட்டுத் தருவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வலியுறுத்த அமைச்சர் முடிவு செய்துள்ளார். இதற்காக முதலமைச்சரை சந்திக்க அமைச்சர் விரைந்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P