GSLV-F17 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அண்ணாமலை வாழ்த்து
சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து GSLV-F17 ராக்கெட் மூலம் EOS-05 செயற்கைக்கோளை செப்டம்பர் 4 அதிகாலை 2:55 மணிக்கு வெற்றிகரமாக
Annamalai


சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.)

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து GSLV-F17 ராக்கெட் மூலம் EOS-05 செயற்கைக்கோளை செப்டம்பர் 4 அதிகாலை 2:55 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

புதன்கிழமை இரவு 11:30 மணிக்கு தொடங்கிய 27 மணி நேர கவுண்ட்டவுன் முடிந்ததும், 51.7 மீட்டர் உயரமும், 420.5 டன் எடையும் கொண்ட 3 நிலைகளைக் கொண்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட் திட்டமிட்டபடி நள்ளிரவில் சீறிப்பாய்ந்தது.

லேசான மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பொதுமக்கள் இந்த வரலாற்று நிகழ்வைக் கண்டு களித்தனர்.

2,367 கிலோ எடைகொண்ட இந்தச் செயற்கைக்கோள், புவி ஒத்திசைவு மாற்றச் சுற்றுப்பாதையில் (Sub-GTO) துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக We The Leaders அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்,

EOS-05 செயற்கைக்கோளை சுமந்து சென்ற GSLV-F17 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்த செயற்கைக்கோள் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், விவசாயத் திட்டமிடலை மேம்படுத்தவும், இயற்கைப் பேரிடர்களின்போது விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவும்.

இந்த வெற்றி இந்தியாவுக்கு மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இதன் மூலம் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 2,367 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை பூமியிலிருந்து 36,000 கி.மீ. உயரத்தில் உள்ள துணை புவிசார் மாற்று சுற்றுப்பாதைக்கு (Sub-Geosynchronous Transfer Orbit) வெற்றிகரமாக கொண்டு சென்றுள்ளோம். இந்த சுற்றுப்பாதை பூமியின் சுழற்சியுடன் ஒத்திசையும் வகையில் அமைந்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN