கோகுலாஷ்டமியை முன்னிட்டு பூத நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக மகா தீப ஆராதனை
திருவண்ணாமலை, 04 செப்டம்பர் (ஹி.ச.) திருவண்ணாமலை மாநகரின் அருணாசலேஸ்வரர் கோவிலின் நான்கு மாட வீதியில் அமைந்துள்ள பாமா ருக்மணி சமேத பூத நாராயண பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி முன்னிட்டு பட்டாட்சியர் வேத மந்திரங்கள் முழங்க பூத நாராயண பெருமாளுக்கு சிறப
Bootha Narayanan


திருவண்ணாமலை, 04 செப்டம்பர் (ஹி.ச.)

திருவண்ணாமலை மாநகரின் அருணாசலேஸ்வரர் கோவிலின் நான்கு மாட வீதியில் அமைந்துள்ள பாமா ருக்மணி சமேத பூத நாராயண பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி முன்னிட்டு பட்டாட்சியர் வேத மந்திரங்கள் முழங்க பூத நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக மகா தீபாரதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூத வடிவிலான பூத நாராயண பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் கோகுலாஷ்டமி விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு கோகுல அஷ்டமியை முன்னிட்டு பாமா ருக்மணி சமேத பூத நாராயண பெருமாளுக்கு பட்டாட்சியர் வேத மந்திரங்கள் முழங்க சீகக்காய் தூள், பச்சை அரிசி மாவு, மஞ்சள் தூள், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், இளநீர், சந்தனம் மற்றும் சொர்ணாபிஷேகம் நடைபெற்று.

துளசி மாலை மற்றும் பூ மாலைகளால் அலங்காரம் செய்து மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூத நாராயணன் பெருமாளை வழிபட்டனர்.

Hindusthan Samachar / ANANDHAN