Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.)
தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,240க்கும், சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,13,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,360க்கும் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,130க்கும், சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.97,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P