நாகை நவநீதகிருஷ்ணன் கோயிலில் தேரோட்ட விழா கோலாகலம்
நாகை , 04 செப்டம்பர் (ஹி.ச.) நாகப்பட்டினத்தில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு நவநீதகிருஷ்ணசுவாமி கோயிலில் தவழும் குழந்தையாகக் கையில் வெண்ணெயுடன் காட்சியளிக்கும் நவநீதகிருஷ்ணனை வேண்டிக்கொண்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்களின
Grand Chariot Procession at Nagai Navaneethakrishnan Temple


நாகை , 04 செப்டம்பர் (ஹி.ச.)

நாகப்பட்டினத்தில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு நவநீதகிருஷ்ணசுவாமி கோயிலில் தவழும் குழந்தையாகக் கையில் வெண்ணெயுடன் காட்சியளிக்கும் நவநீதகிருஷ்ணனை வேண்டிக்கொண்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

இச்சிறப்பு பெற்ற இக்கோவிலில் கோகுலாஷ்டமி (ஸ்ரீ ஜெயந்தி) விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற திருத்தேரோட்டம் இன்று (செப்டம்பர் 4, 2026) பக்திப் பெருக்குடன் கோலாகலமாக நடைபெற்றது.

தேரோட்டத்தை முன்னிட்டு, மலர்கள் மற்றும் துணிகளால் அலங்காரமாய் வடிவமைக்கப்பட்ட திருத்தேரில் ருக்மணி மற்றும் சத்தியபாமா சமேதராக அருள்மிகு நவநீதகிருஷ்ணசுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

கிருஷ்ணா, கோவிந்தா என்ற ஆன்மீக கோஷங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம்பிடித்துத் தேரை இழுத்தனர்.

கோயிலின் முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி வந்த தேரைக் காண, வீதியெங்கும் பக்தர்கள் திரண்டு அர்ச்சனை செய்து, கிருஷ்ணரை வழிபட்டனர். பல்வேறு வீதிகளின் வழியே வலம் வந்த திருத்தேர் இறுதியாக நிலையடியை வந்தடைந்தது.

Hindusthan Samachar / vidya.b