இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மாணிக்கம் தாகூர் வாழ்த்து
தமிழ்நாடு, 04 செப்டம்பர் (ஹி.ச.) இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வரலாற்றுச் சாதனை படை
மாணிக்கம்


தமிழ்நாடு, 04 செப்டம்பர் (ஹி.ச.)

இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணன் தலைமையில் இந்திய விண்வெளித் துறை புதிய சிகரங்களைத் தொட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானிகள்

“The Eye in the Sky” என அழைக்கும் இந்த சாதனையை, தேசப் பாதுகாப்புக்காக “ஒருபோதும் இமைக்காத கண்” என தான் குறிப்பிடுவதாகவும் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

இந்திய விண்வெளித் துறையில் இதுபோன்ற எண்ணற்ற வரலாற்றுச் சாதனைகள் தொடர்ந்து நிகழ வேண்டும் என்றும், விண்வெளியில் விரியும் இந்தியாவின் பெருமையை கண்டு என்றும் பெருமிதம் கொள்வதாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P