வர்த்தகத்தை மேம்படுத்த கேரளத்தில் தேங்காய் பூங்கா!
திருவனந்தபுரம் , 04 செப்டம்பர் (ஹி.ச.) கேரளத்தின் தேங்காய் துறையை மேலும் மேம்படுத்தும் வகையில், ஏற்றுமதிக்கு ஏற்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் வகையில் தேங்காய் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள முதல்-மந்திரி
A


திருவனந்தபுரம் , 04 செப்டம்பர் (ஹி.ச.)

கேரளத்தின் தேங்காய் துறையை மேலும் மேம்படுத்தும் வகையில், ஏற்றுமதிக்கு ஏற்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் வகையில் தேங்காய் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள முதல்-மந்திரி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

வரலாற்று ரீதியாக கேரளம் தேங்காய் சாகுபடியில் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது.

இருப்பினும், தற்போது தேங்காய் உற்பத்தியில் மாநிலம் பின்தங்கியுள்ளது. எனவே, தேங்காய் உற்பத்தியை அதிகரிப்பதுடன், இந்தத் துறையை மேலும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

தேங்காயை நவீன முறையில் பதப்படுத்தி, மதிப்பு கூட்டப்பட்ட உயர்தர பொருட்களாக தயாரிப்பதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக வாய்ப்புகளை உருவாக்க முடியும். மேலும், ஏற்றுமதி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தேங்காய் சார்ந்த பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தேங்காய் பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். தேங்காய் வர்த்தகத்தில் கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், சந்தையை விரிவுபடுத்துவதற்கும் இந்தத் திட்டம் உதவும்.

இதன் மூலம் கேரளத்தின் தேங்காய் துறையை நவீனப்படுத்தி, உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியை ஒருங்கிணைத்து வளர்ச்சி அடையச் செய்ய முடியும் என்று முதல்-மந்திரி தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA