Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.)
கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அநீதிக்கு எதிராக அறம் வெல்லும் என்ற உயரிய கருத்தையும், எத்தகைய சூழ்நிலையிலும் கடமை தவறாமல் செயல்பட வேண்டும் என்ற வாழ்க்கை நெறியையும் ஸ்ரீகிருஷ்ணர் தனது உபதேசங்கள் மூலம் உலகிற்கு உணர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதும் ஸ்ரீகிருஷ்ணரின் முக்கியமான உபதேசங்களில் ஒன்றாகும் என முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீகிருஷ்ணரின் உயரிய வாழ்வியல் நெறிகளை அனைவரும் பின்பற்றி, அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகை உருவாக்கிட வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam