100 அடி பள்ளத்தில் குதித்த தேசிய அளவிலான மல்யுத்த வீராங்கனை - 2 குழந்தைகளுடன் உயிரிழப்பு
மும்பை, 04 செப்டம்பர் (ஹி.ச.) மகாராஷ்டிரா மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நல்துர்க் கோட்டையில் இருந்து 100 அடி ஆழமுள்ள பள்ளத்தில் குதித்ததாக கூறப்படும் தேசிய அளவிலான மல்யுத்த வீராங்கனை மற்றும் அவரது 3 குழந்தைகளில் 2 பேர்
தற்கொலை


மும்பை, 04 செப்டம்பர் (ஹி.ச.)

மகாராஷ்டிரா மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நல்துர்க் கோட்டையில் இருந்து 100 அடி ஆழமுள்ள பள்ளத்தில் குதித்ததாக கூறப்படும் தேசிய அளவிலான மல்யுத்த வீராங்கனை மற்றும் அவரது 3 குழந்தைகளில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மல்யுத்த வீராங்கனையான அஸ்வினி மனோகர் பால் மற்றும் அவரது 5½ வயது மகன் அஜிங்கியா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், அவரது 2½ வயது இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான கிராந்தி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

மற்றொரு இரட்டைக் குழந்தையான வீரா படுகாயமடைந்த நிலையில், தாராஷிவ் அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மல்யுத்த வட்டாரத்தில் பிரபலமாக அறியப்பட்ட அஸ்வினி பால், “மகாராஷ்டிராவின் பெண் புலி” என அழைக்கப்பட்டவர். தனது விளையாட்டு வாழ்க்கையில் தேசிய அளவிலான போட்டிகளில் 5 தங்கம் மற்றும் 6 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்தச் சம்பவம் மகாராஷ்டிரா முழுவதும் மற்றும் விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அஸ்வினி பால் மற்றும் அவரது குழந்தைகளின் மரணம் குறித்து பலரும் அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P