Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 04 செப்டம்பர் (ஹி.ச.)
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட மேகமலை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, அருவியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்புகள் மற்றும் பாதுகாப்புத் தூண்கள் சேதமடைந்தன.
இதனால் அருவிப்பகுதி தற்போது பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகிறது.
இதையடுத்து, சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இந்தத் தடை இன்று 50-வது நாளாக தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் மேகமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
அருவியில் தொடர்ந்து சீரான நீர்வரத்து இருப்பதால், சேதமடைந்த பாதுகாப்புத் தடுப்புகள் மற்றும் தூண்களை சீரமைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், அருவியில் நீர்வரத்து குறைந்து, சேதமடைந்த பகுதிகள் முழுமையாக சீரமைக்கப்பட்ட பின்னரே சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ