‘அடுத்த பிரதமர் விஜய்’? - அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன பதில்
சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.) கோயம்புத்தூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களை சந்தித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில
செங்கோட்டையன்


சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.)

கோயம்புத்தூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களை சந்தித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவும், விஜய் எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் தமிழ்நாடு மட்டுமின்றி உலக நாடுகளில் வாழும் தமிழர்களும் உற்று நோக்கி வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மாற்றுத் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். சமீபத்தில் ஒரு பெண் சட்டப்பேரவை நடவடிக்கைகளை நடத்தும் வாய்ப்பு பெற்றதாகவும், அதனைத் தொடர்ந்து சிறுபான்மை மக்களின் பிரதிநிதியாக இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் அவையை நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.

எல்லாரும் எல்லாம் பெற வேண்டும் என்பதே விஜய்யின் நோக்கம். அந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் இந்த நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், சட்டப்பேரவைத் தலைவர் அவை நடவடிக்கைகளை நடத்துவது என்பது முதல்வரின் சிந்தனைகளையும் எண்ணங்களையும் பிரதிபலிப்பதாகும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தன்னைப் பொறுத்தவரை தமிழ்நாட்டை சிறந்த முறையில் வழிநடத்திச் செல்பவராக விஜய் இருப்பதாகவும், தமிழ்நாடு இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ வேண்டும் என்பதும், அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற வேண்டும் என்பதுமே விஜய்யின் எண்ணமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, அடுத்த பிரதமர் விஜய் தான்” என தவெகவினர் கூறி வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன்,

தமிழ்நாட்டை வழிநடத்த வேண்டும் என்பதே விஜய்யின் எண்ணம். அவரது மனதில் இருக்கும் எண்ணத்தைத்தான் நான் வெளிப்படுத்தியுள்ளேன் என்று பதிலளித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam