நயினார் நாகேந்திரன் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச) கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பக்தர்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகே
நயினார் நாகேந்திரன் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து


சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச)

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பக்தர்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,

அனைவருக்கும் இனிய ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும். அவனது திருவருளால் ஒவ்வொரு இல்லத்திலும் அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்து, நம் மனங்களில் நம்பிக்கையும் நல்லெண்ணமும் என்றும் நிலைத்திருக்கட்டும்.

குழந்தை கிருஷ்ணனின் மழலைக் குறும்பும், கீதையின் ஆழ்ந்த ஞானமும் நம் வாழ்வை நல்வழியில் வழிநடத்தட்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b