365 நாட்களும் கடைகள் திறக்க அனுமதி - மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு
சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.) தமிழ்நாட்டில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை 365 நாட்களும் திறந்து வைத்து செயல்பட அனுமதி அளிக்கும் அரசாணையை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில்,
365 நாட்களும் கடைகள் திறக்க அனுமதி - மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு


சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை 365 நாட்களும் திறந்து வைத்து செயல்பட அனுமதி அளிக்கும் அரசாணையை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் 2023-ம் ஆண்டு இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், அனைத்து கடைகளையும் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த உத்தரவின் காலம் முடிவடையும் நிலையில், தற்போது அதனை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து புதிய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த நீட்டிப்பின் மூலம் வணிகர்கள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், பணியாளர்களின் வேலை நேரம், வாராந்திர விடுமுறை, கூடுதல் ஊதியம் உள்ளிட்ட தொழிலாளர் நல விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b