புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் ஆஜர்
புதுச்சேரி, 04 செப்டம்பர் (ஹி.ச.) தனது சகோதரரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக, தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். அமைச்சர் மரிய வில்சன் தொடர்பான இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்ற
Marie Wilson


புதுச்சேரி, 04 செப்டம்பர் (ஹி.ச.)

தனது சகோதரரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக, தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அமைச்சர் மரிய வில்சன் தொடர்பான இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரியும், புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் அமைச்சர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சர் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இன்று புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு வந்திருந்த நிலையில், அமைச்சர் மரிய வில்சனும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN