சங்கரன்கோவில் மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு - மல்லிகை கிலோ ரூ.850-க்கு விற்பனை
தென்காசி, 04 செப்டம்பர் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றான சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு தினமும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் பூக்களை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த சி
சங்கரன்கோவில் மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு - மல்லிகை கிலோ ரூ.850-க்கு விற்பனை


தென்காசி, 04 செப்டம்பர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றான சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு தினமும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் பூக்களை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சந்தையில் பூக்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

இதில் குறிப்பாக சுப நிகழ்ச்சிகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் மல்லிகைப்பூ இன்று காலை விலை நிலவரப்படி ஒரு கிலோ 850 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் பிச்சிப்பூ கிலோ 750 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மற்ற பூக்களான ரோஜா, சம்பங்கி, கனகாம்பரம் போன்றவற்றின் விலையும் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

விலை உயர்வு காரணமாக பூக்களை வாங்க வரும் பொதுமக்கள் குறைந்த அளவே பூக்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால் சில்லறை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரும் நாட்களில் வரத்து சீரானால் மட்டுமே விலை குறையும் என்று சந்தை வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

Hindusthan Samachar / vidya.b