Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 04 செப்டம்பர் (ஹி.ச.)
சிவகாசி அருகே அனுப்பன்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரராஜபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தொழிற்சாலை உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விபத்தில் ஈஸ்வரன் (56) என்ற தொழிலாளி உயிரிழந்தார்.
இதையடுத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட சிவகாசி கிழக்குக் காவல் நிலைய போலீசார், தொழிற்சாலையின் உரிமையாளர் ஆறுமுகச்சாமி, மேலாளர் தங்கத்துரை மற்றும் மேற்பார்வையாளர்களான போர்மேன்கள் கோபி கண்ணன், கணேசன் ஆகிய 4 பேர் மீது மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் போர்மேன் கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள தொழிற்சாலை உரிமையாளர் ஆறுமுகச்சாமி, மேலாளர் தங்கத்துரை மற்றும் போர்மேன் கோபி கண்ணன் ஆகிய 3 பேரையும் சிவகாசி கிழக்குப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam