தமிழகத்தில் பொறியியல் துணை கலந்தாய்வு இன்று தொடக்கம் - 18,548 மாணவர்கள் பங்கேற்பு
சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச) தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் நடத்தப்படும் இந்த துணை கலந்தாய்வில், இடம் கிடைக்காத மற்றும் பங்கேற்காத மாணவர்களுக்கு மீண்
Supplementary engineering counseling begins


சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச)

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் நடத்தப்படும் இந்த துணை கலந்தாய்வில், இடம் கிடைக்காத மற்றும் பங்கேற்காத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதன்படி துணை கலந்தாய்வுக்கான விருப்ப பாடப்பிரிவுகள் மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்யும் நடைமுறை இன்று காலை 11 மணி முதல் தொடங்குகிறது. மாணவர்கள் இன்று முதல் நாளை மாலை 5 மணி வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பொறியியல் துணை கலந்தாய்வுக்கான தற்காலிக இட ஒதுக்கீட்டு பட்டியல் வரும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தற்காலிகமாக இடம் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் செப்டம்பர் 7-ம் தேதி இரவு 7 மணிக்குள் தங்களது இடத்தை உறுதி செய்ய வேண்டும். இதனையடுத்து செப்டம்பர் 9-ம் தேதி இறுதி ஒதுக்கீட்டு பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நான்கு பிரிவுகளின் கீழ் மொத்தம் 18,548 மாணவர்கள் இந்த துணை கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b