Enter your Email Address to subscribe to our newsletters

கோவை , 04 செப்டம்பர் (ஹி.ச.)
இன்று கிருஷ்ணர் பிறந்த தினம். இதனை கிருஷ்ண ஜெயந்தியாகவும் கிருஷ்ண ஜென்மாஷ்டமியாகவும் கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை கொடிசியா அருகில் உள்ள இஸ்கான் ஜெகன்நாதர் ஆலயத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலை முதல் சிறப்பு ஆராதனை, அகண்ட நாம சங்கீர்த்தனம், கிருஷ்ண நாமங்கள் பாடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதில் பலராமர், சுப்த்ரா, கிருஷ்ணன் விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருளினர். பக்தர்கள் அனைவரும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற பக்தி முழக்கங்களுடன் கோவில் முழுவதும் சுற்றி வந்து தரிசனம் செய்தனர்.
தரிசனம் செய்ய வந்த பல்வேறு பக்தர்கள் அவர்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணர் ராதை வேடமிட்டும் அழைத்து வந்து தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை கலச அபிஷேகம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இங்கு நடைபெற உள்ளது. அதுமட்டுமின்றி இங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA