Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.)
கிருஷ்ண ஜெயந்தி மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணர் பூமியில் அவதரித்த நாளைக் கொண்டாடும் ஒரு மிக முக்கியமான இந்து சமய வழிபாட்டு பண்டிகையாகும்.
தீமைகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும், மனிதகுலத்திற்கு பகவத் கீதை என்னும் உன்னத வாழ்வியல் நெறியை வழங்கவும் கண்ணன் அவதரித்தார். இந்த ஆண்டு 2026-இல், கிருஷ்ண ஜெயந்தி இன்று நாடு முழுவதும் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தள பதிவில் அவர் இன்று கூறி இருப்பதாவது:-
பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவதரித்த திருநாளாகக் கொண்டாடப்படும் இந்நன்னாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நன்னாளில், நாட்டு மக்கள் அனைவரது வாழ்விலும் ஒற்றுமை, அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளம் பெருகிட, எல்லாம் வல்ல பகவான் ஶ்ரீ கிருஷ்ணரைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b