Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 04 செப்டம்பர் (ஹி.ச)
கோகுலாஷ்டமி என்றும் அழைக்கப்படும் ஜென்மாஷ்டமி, இந்து மரபின்படி பாத்ரபத மாதத்தில் கிருஷ்ண பட்சத்தின் எட்டாம் நாளில் கொண்டாடப்படும் வருடாந்திர திருவிழாவாகும்.
அந்த வகையில் பகவான் கிருஷ்ணரின் பிறந்தநாளான ஜென்மாஷ்டமியை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பக்தர்கள் திரண்டு மங்கள ஆரத்தி மற்றும் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
டெல்லியில், கிழக்கு கைலாஷ் மற்றும் துவாரகா செக்டார் 13-ல் உள்ள இஸ்கான் கோயில்களில் மங்கள ஆரத்தியில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர்.
நகரில் உள்ள பிர்லா மந்திரிலும் இன்று அதிகாலையில் சிறப்பு மதச் சடங்குகள் நடைபெற்றன. இதற்காக கோயில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கிருஷ்ணரின் பிறப்பிடமாக கருதப்படும் மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோயிலில் பக்தர்கள் மங்கள ஆரத்தி மற்றும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர்.
இந்த தலத்தின் முக்கியத்துவத்தை போற்றும் வகையில் பக்தி நடனங்களும் நடைபெற்றன. மதுரா முழுவதும் உள்ள கோயில்களில் மக்கள் சடங்குகளில் ஈடுபட்டதால் பக்தி மயமான சூழல் நிலவியது.
இதேபோல், பிருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீ பாங்கே பிஹாரி ஜி கோயிலில் ஜென்மாஷ்டமி ஆரத்தியில் கலந்துகொள்ள பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்தனர். தடுப்புகள் அமைக்கப்பட்ட வரிசைகளில் நின்று தரிசனம் பெறவும், கொண்டாட்டங்களில் பங்கேற்கவும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கொண்டாட்டங்கள் மும்பை வரை நீண்டது. அங்குள்ள சவுப்பாட்டி இஸ்கான் கோயிலில் ஏராளமான பக்தர்கள் பிரார்த்தனைகள் மற்றும் சடங்குகளில் பங்கேற்றனர்.
முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஏற்பட்ட பெரும் கூட்டம் காரணமாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒழுங்கான முறையில் நிகழ்ச்சிகள் நடைபெறுவதை உறுதி செய்ய கிழக்கு கைலாஷ் இஸ்கான் கோயில் உட்பட பல்வேறு இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b