தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை- கோரிக்கைகள் நியாயமானவை என உறுதி
சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.) சென்னையில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுடன் தமிழக அமைச்சர்கள் குழு ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தியது. அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜு
அமைச்சர்கள்


சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னையில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுடன் தமிழக அமைச்சர்கள் குழு ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தியது.

அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார், ராஜ்மோகன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களிடம் பேசிய அமைச்சர் என். ஆனந்த், அவர்களின் குறைகளைக் கேட்டறிய முதல்-அமைச்சர் தங்களை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தார்.

பணியாளர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்றும், கலந்தாலோசித்து நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில்,

இது பணியாளர்களின் அரசு என்றும், அவர்கள் எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்தார். ஒவ்வொரு கட்டமாக தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்றும் உறுதியளித்தார்.

அமைச்சர் ராஜ்மோகன், போராடுவது தூய்மைப் பணியாளர்களின் உரிமை என்றும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை என்றும் தெரிவித்தார்.

அதேபோல், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அனைத்து பிரச்சினைகளையும் அரசு உணர்வுபூர்வமாக அணுகி வருவதாகவும், கோரிக்கைகளுக்கு தீர்வு காண சிறிது கால அவகாசம் தேவை என்றும் கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam