கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 155-வது பிறந்தநாள் - தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மலரஞ்சலி
சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.) சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியும், செக்கிழுத்த செம்மலும், கப்பலோட்டிய தமிழனுமான வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாள் விழா இன்று தமிழக அரசு சார்பில் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னை
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 155-வது பிறந்தநாள் - தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மலரஞ்சலி


சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.)

சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியும், செக்கிழுத்த செம்மலும், கப்பலோட்டிய தமிழனுமான வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாள் விழா இன்று தமிழக அரசு சார்பில் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள மண்டப வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிலை அருகே வ.உ.சி.யின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு, அதற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் ஆனந்த், ராஜ்மோகன், அருண்ராஜ், ராஜேஷ்குமார், வெங்கட்ரமணன் ஆகியோர் கலந்துகொண்டு வ.உ.சிதம்பரனாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.

அப்போது பேசிய அமைச்சர்கள், ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கி, தன் சொத்துக்களையெல்லாம் இழந்து, கொடூரமான சிறைவாசத்தையும், செக்கிழுக்கும் கொடுமையையும் அனுபவித்தவர் வ.உ.சி. என்றும், அவரது தியாகமும், தேசப்பற்றும் என்றென்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் என்றும் புகழாரம் சூட்டினர்.

இந்த நிகழ்வில் அரசு உயர் அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வ.உ.சி. சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

Hindusthan Samachar / vidya.b