Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 05 செப்டம்பர் (ஹி.ச.)
ஆசிரியர் தினத்தையொட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவை போற்றும் வகையில் சமூக வலைத்தளத்தில் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்குவதிலும், அவர்களின் வாழ்க்கைக்கு சிறந்த பாதையை அமைத்து கொடுப்பதிலும் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
எதிர்கால இந்திய குடிமக்களை உருவாக்கும் ஆசிரியர்களின் பணி மிகவும் பாராட்டுக்குரியது. சமூக கட்டமைப்பிலும், கல்வித்துறையின் வளர்ச்சியிலும் ஆசிரியர்களின் பங்களிப்பு அளப்பரியது.
மிகவும் எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த டாக்டர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன், தனது அறிவு, திறமை மற்றும் உயர்ந்த கொள்கைகளால் நாட்டின் உயரிய பதவியான குடியரசுத் தலைவர் பதவியை அடைந்தார்.
அவரது வாழ்க்கையும், பயணமும் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாகும்.
சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன் காட்டிய பாதையையும், அவர் கடைப்பிடித்த உயர்ந்த மதிப்புகளையும் இன்றைய தலைமுறையினர் முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA