தீபாவளி சிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்
சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவ
தீபாவளி சிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்


சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விரைவு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.

பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம்.

இதனால் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி, நவம்பர் 5-ம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு நாளை சனிக்கிழமை தொடங்குகிறது.

அதைத் தொடர்ந்து,

நவம்பர் 6-ம் தேதி பயணத்திற்கான முன்பதிவு வரும் திங்கட்கிழமை செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பயணிகள் IRCTC இணையதளம் மற்றும் செயலி மூலமாகவும், ரயில் நிலைய முன்பதிவு மையங்களிலும் காலை 8 மணி முதல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். தீபாவளி நெரிசலை தவிர்க்க விரைவில் முன்பதிவு செய்வது நல்லது.

Hindusthan Samachar / vidya.b