கடைகளின் பெயர் பலகைகளை நவம்பர் 1-க்குள் தமிழில் மாற்ற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகைகள் வைப்பதை கட்டாயப்படுத்திய தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த, வரும் நவம்பர் 1ஆம் தேதிக்குள் பெயர் பலகைகளை தமிழில் மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
High court


சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகைகள் வைப்பதை கட்டாயப்படுத்திய தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த, வரும் நவம்பர் 1ஆம் தேதிக்குள் பெயர் பலகைகளை தமிழில் மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் இடம்பெற வேண்டும் என 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, மும்பையைச் சேர்ந்த இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி

கே. சுரேந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த தங்கள் சங்கம் தயாராக இருப்பதாகவும், அதற்காக மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் மனுதாரர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கடைகளின் பெயர் பலகைகளை நவம்பர் 1ஆம் தேதிக்குள் தமிழில் மாற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், நீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் பெயர் பலகைகளை மாற்றத் தவறும் கடைகள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதி கே. சுரேந்தர் உத்தரவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ