Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 05 செப்டம்பர் (ஹி.ச.)
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், ‘கப்பலோட்டிய தமிழன்’ எனப் போற்றப்படுபவருமான வ.உ. சிதம்பரனாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தீவிரமாக முன்னெடுத்தவர் வ.உ. சிதம்பரனார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களிடையே சுதேசி உணர்வை வளர்க்கும் நோக்கில் சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கி, ஆங்கிலேயர்களின் கடல் வணிக ஆதிக்கத்திற்கு நேரடியாக சவால் விடுத்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் போராட்டத்திற்காக தனது சொத்துக்களையே தியாகம் செய்த வ.உ.சி., நாட்டின் சுதந்திரத்திற்காக சிறைத் தண்டனையின் கொடுமைகளையும் தாங்கியதாக எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.
சிறையில் செக்கிழுத்து கடுமையான தண்டனையை அனுபவித்ததால், அவர் ‘செக்கிழுத்த செம்மல்’ என்றும் போற்றப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தேசத்தையே தனது கண்ணாகக் கொண்டு, தியாகம், துணிவு மற்றும் நாட்டுப்பற்று நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்த வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும் தியாகத்தையும் அவரது பிறந்த நாளில் போற்றி வணங்குவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam