விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றால அருவிகளில் குவியும் சுற்றுலா பயணிகள் கூட்டம்
தென்காசி, 05 செப்டம்பர் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலுமே சனிக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வருகிறது. கு
Courtallam Falls


தென்காசி, 05 செப்டம்பர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலுமே சனிக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, பழைய குற்றால அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலுமே தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டுள்ள நிலையில், விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் குற்றாலமானது களைகட்டி உள்ளது.

குறிப்பாக அனைத்து, அருவிகளிலுமே சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில் குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பு பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN