உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோத மசூதி இடிப்பு பணி தொடக்கம்
சஹாரன்பூர், 05 செப்டம்பர் (ஹி.ச.) கடந்த ஜூலை 17-ம் தேதி, நகர நீதிபதி நீதிமன்றம் உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டிருந்த மசூதியை சட்டவிரோத கட்டுமானம் என அறிவித்து, அதனை இடிக்க உத்தரவிட்டதுடன், அரசு நி
Demolition of illegal mosque begins in Uttar Pradesh.


சஹாரன்பூர், 05 செப்டம்பர் (ஹி.ச.)

கடந்த ஜூலை 17-ம் தேதி, நகர நீதிபதி நீதிமன்றம் உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டிருந்த மசூதியை சட்டவிரோத கட்டுமானம் என அறிவித்து, அதனை இடிக்க உத்தரவிட்டதுடன், அரசு நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து தவறாக பயன்படுத்தியதற்காக ஆக்கிரமிப்பாளர்களுக்கு சுமார் ரூ.6.41 கோடி இழப்பீடு விதித்தது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்ற பாதுகாப்பு மிகுந்த அரசு வளாகத்திற்குள் மசூதி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக பஜ்ரங் தள் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் விகாஸ் தியாகி அளித்த புகாரின் பேரில் இந்த விவகாரம் எழுந்தது.

மத நடவடிக்கைகளுக்கு மட்டுமின்றி வணிக ரீதியாகவும் வளாகம் பயன்படுத்தப்பட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அங்கு தபால் நிலையம் இயங்கி வந்ததாகவும், அறைகள் வெளிநபர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டு மசூதி குழுவினர் மாதந்தோறும் வாடகை வசூலித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட நீதிமன்ற உத்தரவை அடுத்து இந்த மசூதியை இடிக்கும் பணி, இன்று அதிகாலை தொடங்கியது. ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

துணை கோட்டாட்சியர் மற்றும் நகராட்சி நீதிபதி உள்ளிட்ட நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் புல்டோசர்கள் மூலம் இடிப்பு பணி தொடங்கியது. பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல்துறையினர் மற்றும் மாகாண ஆயுதப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வளாகத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டுள்ளன.

நகர நீதிபதியின் உத்தரவை எதிர்த்து முஸ்லிம் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

நேற்று மாவட்ட நீதிபதி இரு தரப்பு வாதங்களையும் ஆதாரங்களையும் ஆய்வு செய்த பின், மேல்முறையீட்டை நிராகரித்து, அசல் உத்தரவை உறுதி செய்தார்.

Hindusthan Samachar / vidya.b