நாகை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் - ஆட்சியர் பிரவீன் குமார் அறிவிப்பு
நாகப்பட்டினம், 05 செப்டம்பர் (ஹி.ச.) நாகப்பட்டினம் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்றும் நாளையும் என இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் பிரவீன் க
நாகை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்


நாகப்பட்டினம், 05 செப்டம்பர் (ஹி.ச.)

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்றும் நாளையும் என இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் பிரதான குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரிசெய்யும் பணி மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதன் காரணமாக வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் கீழ்வேளூர், கீழையூர், தலைஞாயிறு மற்றும் வேதாரண்யம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது.

எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b