தலைகீழாக சரிந்தது தங்கம் விலை- நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்..!
சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.) தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை மாத கடைசியில் தொடர் சரிவை கண்டது. அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் மாதமும் ஏற்ற இறக்கமாக இருந்து
தங்கம்


சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.)

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை மாத கடைசியில் தொடர் சரிவை கண்டது.

அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் மாதமும் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,360க்கும் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,880க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 குறைந்து ஒரு கிராம் ரூ.14,190க்கும் சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.170 குறைந்து ஒரு கிராம் ரூ.11,960க்கும், சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ஒரு சவரன் ரூ.95,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P