Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கழகப் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் நாளை (செப்டம்பர் 6, ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அன்போடு கேட்டுக் கொண்டுள்ளார்.
கட்சியின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b