Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 05 செப்டம்பர் (ஹி.ச.)
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக 8,456 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 8,195 கன அடியாக சரிந்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைந்ததும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததுமே இதற்கு காரணமாக கருதப்படுகிறது.
அணையின் தற்போதைய நீர்மட்டம் 92.23 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி என்ற நிலையில், தற்போதைய நீர் இருப்பு 55.23 டிஎம்சியாக பதிவாகியுள்ளது. இது விவசாயிகளுக்கு ஓரளவு நம்பிக்கை அளிக்கும் நிலையாகவே உள்ளது.
இதற்கிடையே டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த நீர் திறப்பு விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b