குவைத்தில் சிக்கிய கள்ளக்குறிச்சி பெண்ணை மீட்ட பிரதமருக்கு நயினார் நாகேந்திரன் நன்றி
தமிழ்நாடு, 05 செப்டம்பர் (ஹி.ச.) குவைத் நாட்டில் சிக்கித் தவித்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பெண்ணை பத்திரமாக மீட்ட பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்த
நயினார் நாகேந்திரன்


தமிழ்நாடு, 05 செப்டம்பர் (ஹி.ச.)

குவைத் நாட்டில் சிக்கித் தவித்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பெண்ணை பத்திரமாக மீட்ட பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழ் மொழியையும், தமிழ் மக்களையும் வெறும் அரசியல் கருவிகளாக பயன்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில், குவைத்தில் சிக்கித் தவித்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பெண்ணை பத்திரமாக மீட்ட பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நெஞ்சார்ந்த நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நேபாள பெருவெள்ளம், வங்கதேச வன்முறை கலவரம், ஈரான்–இஸ்ரேல் போர், ரஷ்யா–உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் சிக்கிய இந்தியர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆபத்தில் இருப்பவர்களுக்கு எவ்விதப் பாகுபாடுமின்றி “நான் இருக்கிறேன்” என நம்பிக்கைக் கரம் நீட்டுவதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் இயல்பும் பண்பும் என்றும், அண்டை நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமின்றி அண்டை நாட்டினருக்கும் உதவும் ஆபத்பாந்தவனாக பிரதமர் விளங்குகிறார் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam