எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு, யாரும் யாரையும் பழிவாங்கும் நோக்கம் கிடையாது -அமைச்சர் நிர்மல் குமார்
மதுரை, 05 செப்டம்பர் (ஹி.ச.) மதுரையில் மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கே என் நேரு வீட்டில் ரெய்டு நடைபெறுவது எந்த ஒரு பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை. ஆதாரத்தின் அடிப்படையிலேயே இ
CTR Nirmal Kumar


மதுரை, 05 செப்டம்பர் (ஹி.ச.)

மதுரையில் மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

கே என் நேரு வீட்டில் ரெய்டு நடைபெறுவது எந்த ஒரு பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை. ஆதாரத்தின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெற்று வருகிறது. யாரையும் யாரும் பழிவாங்கும் நோக்கம் கிடையாது

உதயநிதி பெண்களை பற்றி அவதூறாக பேசியதற்கு தான் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். யார் யாருடன் சேர்ந்தாலும் எங்கள் ஆட்சியை எதுவும் செய்ய முடியாது.

ஒவ்வொரு நாளும் சட்டமன்றமும் 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தில் அனைவருக்கும் பேச சரி சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது

முதல்வரின் அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அவரது அலுவலகத்தில் இருந்து தகவல் வரும். அதை மட்டும் நம்ப வேண்டும் என்று கூறினார்.

Hindusthan Samachar / ANANDHAN