Enter your Email Address to subscribe to our newsletters

புவனேஸ்வர் , 05 செப்டம்பர் (ஹி.ச.)
சர்வதேச செஸ் கூட்டமைப்பான ‘பிடே’ வெளியிட்ட செப்டம்பர் மாத தரவரிசை பட்டியலில், ஒடிசாவை சேர்ந்த 4 வயது சிறுமி எலெனா சர்மா இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
எலெனா சர்மாவுக்கு தற்போது 4 வயது, 6 மாதம், 16 நாட்கள் ஆகிறது. இவர் சமீபத்தில் நடைபெற்ற ‘பிடே’ தரவரிசை போட்டியில் பங்கேற்று விளையாடினார். இதில் சிறப்பாக செயல்பட்ட அவர் 1,432 தரவரிசை புள்ளிகளை பெற்றார்.
இதன் மூலம் ‘பிடே’ தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த இளம் வீராங்கனை என்ற பெருமையை எலெனா சர்மா பெற்றுள்ளார்.
சிறு வயதிலேயே சர்வதேச செஸ் தரவரிசையில் இடம்பிடித்துள்ள அவரது சாதனை, செஸ் உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.
எலெனா சர்மாவின் இந்த சாதனைக்கு செஸ் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA