போதை எதிர்ப்பு நடைபயணம் - பஞ்சாப் ஆளுநர் தொடங்கி வைத்தார்
பஞ்சாப், 05 செப்டம்பர் (ஹி.ச.) பஞ்சாப் மாநில ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா இன்று சுக்னா ஏரியில் போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் நலவாழ்வு நடைபயணத்தை தொடங்கி வைத்தார். போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிர
போதை எதிர்ப்பு நடைபயணம் -   பஞ்சாப் ஆளுநர் தொடங்கி வைத்தார்


பஞ்சாப், 05 செப்டம்பர் (ஹி.ச.)

பஞ்சாப் மாநில ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா இன்று சுக்னா ஏரியில் போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் நலவாழ்வு நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.

போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பொதுமக்கள் ஒன்றிணைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ஊடகங்களிடம் பேசிய ஆளுநர் கட்டாரியா,

பிரதமர் மோடி போதைப்பொருள் இல்லாத இந்தியாவை கனவு காண்கிறார். குருமார்களுக்கு சொந்தமான, வீரம் மிகுந்த மக்களின் பூமியான சண்டிகருக்கு வருகை தந்துள்ள நிலையில், எந்தவொரு தீமைக்கு எதிராகவும் போராடுவது அவர்களின் இயல்பிலேயே உள்ளது என்பதை நான் அறிவேன்.

சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலிருந்து இன்று வரை, தேசத்தின் எல்லைகளின் பாதுகாப்பிற்காக அதிக தியாகங்களை செய்த மாநிலம் பஞ்சாப் தான் என்று நான் நம்புகிறேன்.

துரதிர்ஷ்டவசமாக, பல ஆண்டுகளாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து கடத்தல் பொருட்களின் பெருமளவு வரத்து உள்ளது. வர்த்தகத்திற்காக நமது பகுதியைச் சேர்ந்த ஒருவர் அதற்கு உடந்தையாக இருக்கும்போது மட்டுமே இத்தகைய சட்டவிரோதப் பொருட்கள் கொண்டுவரப்படுகின்றன.

அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருள் வர்த்தகத்தை பணம் சம்பாதிக்கும் வழியாக மாற்றியிருப்பது நமது நாட்டின் பலவீனத்தை பிரதிபலிக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை மக்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதனை படைத்த உள்ளூர் விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், குடிமக்களிடையே நலவாழ்வை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடைபயணம் நடத்தப்பட்டது.

Hindusthan Samachar / vidya.b