சேலம் ரயில்வே கோட்டத்தில் ஒரே மாதத்தில் ரூ.2.48 கோடி அபராதம் வசூல்
சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.) சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் ஆகஸ்ட் மாதத்தில் 4,600-க்கும் மேற்பட்ட அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு, விதிமீறலில் ஈடுபட்ட பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிய டிக்கெட
Salem


சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.)

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் ஆகஸ்ட் மாதத்தில் 4,600-க்கும் மேற்பட்ட அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு, விதிமீறலில் ஈடுபட்ட பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உரிய டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 11,800-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து ரூ.1.32 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.1.15 கோடியும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக லக்கேஜ் வைத்திருந்தவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரமும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சேலம் ரயில்வே கோட்டத்தில் மொத்தம் ரூ.2.48 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அபராதத் தொகை வசூல் 18 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணிகள் உரிய பயணச்சீட்டுடன் பயணம் செய்வதுடன், ரயில்வே விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ