Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.)
நாடு முழுவதும் இன்று செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. பல அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் வீ தி லீடர்ஸ்
(We The Leaders) அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்,
மாணவர்களை அறிவால் மட்டுமல்ல, வாழ்வியல் நெறிகளாலும் வழிநடத்திய நமது முன்னாள் குடியரசுத் தலைவர், தத்துவ மேதை, டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுவது, ஆசிரியர்களின் பெருமைக்குக் கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரம்.
ஆசிரியர்கள் பாடங்களைக் கற்றுத் தருவதோடு மட்டுமல்லாமல், அறிவையும், சிந்தனையையும், நல்ல பண்புகளையும் மாணவர்களின் மனதில் விதைப்பதில் முக்கியமானவர்கள்.
ஒவ்வொரு தலைமுறையின் வாழ்வையும் வடிவமைத்த, வடிவமைத்துக் கொண்டிருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN