சென்னையில் இன்று ஆசிரியர் தின விருது வழங்கும் விழா
சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.) ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெறுகிறது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று காலை 10 மணி
Teachers' Day Award Presentation Ceremony in Chennai Today


சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.)

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெறுகிறது.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு இந்த விழா நடைபெறுகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிறப்பாக பணியாற்றிய 389 ஆசிரியர், ஆசிரியைகளுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.

தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் உயரிய விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கி சிறப்பிக்கிறார்.

இதற்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பி.சந்தரமோகன் தலைமை வகிக்கவுள்ளார்.

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், கற்பித்தல் பணியில் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டதற்காகவும் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது ரூ.10,000 ரொக்கம், 36.5 கிராம் வெள்ளிப்பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b