Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.)
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தனது ஆசான் திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில்,
சமூகக்கட்டமைப்பில் நல்ல மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர் பெருமக்கள் தான்.
இந்த மாணவர்களே சமூகத்தில் கலந்து மக்களுக்கான களப்பணிகளை செய்கிறார்கள்.
அப்படித்தான் தலைவர்களும் சமூக கட்டமைப்பை மாற்ற
ஆசிரியர்களாக- பேராசான்களாக களமாடுகிறார்கள்.
புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற தலைவர்கள் வழியில் எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்கள்
இந்த சமூக கட்டமைப்பை மாற்றுவதற்கான பேராசானாக களமாடி வருகிறார்.
ஒவ்வொரு பொதுக்கூட்டத்தையும்
வகுப்பறைகளாக மாற்றி வருகிறார்.
இன்று ஆசிரியர் தினத்தில் எமது ஆசிரியரை சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தோம்.
ஆசிரியரின் நம்பிக்கைக்குரிய மாணவராக- நல்ல மாணவராக - பாராட்டுதலுக்குரிய மாணவராக செயல்படுவது ஒன்றே ஆசிரியருக்கு செலுத்தும் மரியாதையாகும்.
ஆசிரியரின் நம்பிக்கைக்குரிய மாணவராக இருப்பதே முதன்மை என களமாடி வருகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN