டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள்- ஆசிரியர் பெருமக்களுக்கு ஆளுநர் அர்லேகர் வாழ்த்து
தமிழ்நாடு, 05 செப்டம்பர் (ஹி.ச.) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், முதல் குடியரசுத் துணைத்தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்
Arlekar


தமிழ்நாடு, 05 செப்டம்பர் (ஹி.ச.)

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், முதல் குடியரசுத் துணைத்தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

திருத்தணியில் பிறந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தத்துவத்தில் வித்தகராகவும், தலைசிறந்த எழுத்தாளராகவும் விளங்கியவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பழம்பெரும் ஞானத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு நூல்களை அவர் எழுதியதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்கள் பலவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியதுடன், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஒன்பது ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய அவரது பங்களிப்பையும் ஆளுநர் தனது பதிவில் நினைவுகூர்ந்துள்ளார்.

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் வகையில் அரசு அறிவித்ததைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அவரது நினைவுடன் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் தனது நெஞ்சம் நிறைந்த ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சிற்பிகளான ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், என ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P