Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 05 செப்டம்பர் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், ஆசாத் நகர் பகுதியில் வசித்து வரும் சுடலை என்பவர் அவரது வீட்டில் சட்டவிரோதமாக வெடி பொருட்கள் தயாரித்த நிலையில், நேற்றைய தினம் எதிர்பாராத விதமாக அவரது வீட்டில் இருந்த வெடிபொருளுக்கானது வெடித்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அவரது வீட்டில் இருந்த அவரது மகள்களான பால சௌந்தர்யா( வயது 13) மற்றும் கிருத்திகா (வயது 7) ஆகிய இரண்டு சிறுமிகளும் படுகாயம் அடைந்தனர்.
இந்த நிலையில், தகவல் அறிந்து விரைந்து சென்ற தென்காசி தீயணைப்பு துறையினர் மற்றும் குற்றாலம் மற்றும் தென்காசி போலீசார் படுகாயம் அடைந்த சிறுமிகளை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருத்திகா நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கிருத்திகா தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் பால சௌந்தர்யா தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்ட விரோதமாக வீட்டில் வெடி பொருட்களை தயாரித்த சிறுமியின் தந்தையான சுடலை என்பவரை தற்போது போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN